தேசிய விருது பெற்ற நடிகைக்கு நேர்ந்த பாலியல் கொடுமை!
சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் பற்றி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் டாக்குமண்டரி ஃபிலிம் ஒன்றில் நடிகைகள் ஓப்பனாக பேசியிருக்கிறார்களாம்.
இதில் பேசிய தேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ், நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது மிக சாதாரணமாக நடைபெறுகிறது. அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்களும் இது போன்ற குற்றங்களில் செய்கிறார்கள்.
பட வாய்ப்பு கொடுக்கிறோம். அதற்கு பதிலாக நீங்கள் ஏதாவது திருப்பித்தர வேண்டும் என என்னையே கூப்பிட்டார்கள் என பதிவு செய்துள்ளார்.
மேலும் மற்றொரு நடிகை பேசிய போது, சினிமா வாய்ப்புக்கான ஏஜெண்ட் ஒருவர் என்னிடம் நடிகைகள் செக்ஸ் வைத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.
என்னை கண்ட கண்ட இடங்களில் தொட்டு பேசினார். நான் மறுத்ததும் நீ சினிமாவுக்கு சரிபட்டு வரமாட்டாய் என்று கூறிவிட்டு போய்விட்டார் என கூறினார்..