சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’.இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி முதல் முதலாக தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகிறார். தமிழ், இந்தி, மலையாளத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பாத்திரம் என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது. சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்தின் வலதுகரமாக இருக்கும் ஒப்பாயா என்ற பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சைராவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தவர் ஒப்பாயா. இது சிரஞ்சீவியுடன் பெரும்பாலான காட்சிகளில் நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம். எனவே, இது விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுக் கொடுக்கும். இதன்மூலம் விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய் சேதுபதி விக்ரம் வேதா,சுந்தரபாண்டியன்,ரம்மி,இதற்க்குதனே ஆசை பட்டாய்பாலகுமாரா உட்பட பல படங்களில் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
source: dinasuvadu.com
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…