தெலுங்கில் களமிறங்கும் தாதா….!!!
- இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவான படம் தாதா 87.
- தெலுங்கில் “பவுடர்” என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.
இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவான படம் தாதா 87. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கலை சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், தாதா 87 திரைப்படத்தில் ஒரு கதாநாயகி திருநங்கையாக நடித்தது, உலக சினிமா வரலாற்றில் முதல் முயற்சி என்ற சிறப்பைப் பெற்றது. நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான திரையரங்குகளில் திரையிட முடியவில்லை.
இதனையடுத்து இந்த படத்தை, கோடை விடுமுறையில் மீண்டும் திரையிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள்.
மேலும், இந்த படம், தெலுங்கில் “பவுடர்” என்ற பெயரில் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.