தெறி ரீமேக்கில் எமியின் இடத்தைப் பிடித்த தெரசா …!
கேத்ரின் தெரேசா தெறி தெலுங்கு ரீமேக்கில், எமி ஜாக்சன் நடித்த கேரக்டரில் நடிக்கிறார்.
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் ரிலீஸான படம் ‘தெறி’. எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்தார். வருகிற 14 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகி இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது.
இந்தப் படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்கிறார் சந்தோஷ் ஸ்ரீனிவாஸ். விஜய் கேரக்டரில் ரவிதேஜா நடிக்க, எமி ஜாக்சன் கேரக்டரில் கேத்ரின் தெரேசா நடிக்கிறார். சமந்தா கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.