தென்சினிமாவிற்கு சங்கத்தால் வரும் சன்னி லியோன்….!!!!!ஒப்பந்தம் ஒகே ஆனது..!!
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் அயோக்யா இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவூட் முன்னணி நடிகர்கள் நடிகை சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை பெருமளவு தவிர்க்கிறார்கள்.அதையும் மீறி நடிகை சன்னிலியோன் நடித்து வெளிவரும் படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சர்ச்சை போலீஸ் நிலையங்களில் புகார்களாக பதிவாகிறது. மேலும் நடிகை சன்னி கர்நாடகத்தில் பங்கேற்க இருந்த ஒரு நடன நிகழ்ச்சிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் கர்நாடக அரசே நிகழ்ச்சிக்கு தடைவிதித்தது. இந்த நிலையில் சன்னியின் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்கிற சரித்திர படத்தில் சன்னிலியோன் ஹூரோயினியாக நடித்து வருகிறார்.
ஆனால் இந்த படத்துக்கு எதிராக கர்நாடகா மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கூடாது என்பதை நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. ஸ்சன்னியின் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை இயக்குநர் வடிவுடையான் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில் தான் சன்னிக்கு நடிகர் விஷாலின் அயோக்கியா படத்துக்கு ஒப்பந்தம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது.படத்தை வெங்கட்மோகன் இயக்குகிறார்.மேலும் இந்த படத்தில் ஹூரோயினியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
DINASUVADU