"தூள் கிளப்பும் வடசென்னை டீசர்" கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்..!!
‘விசாரணை’ படத்தின் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் ‘வடசென்னை’. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகுமாம்.
சமீபத்தில், படத்தின் பார்ட் 1-க்கான ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தை அக்டோபர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தின் புதிய டீசரை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.
DINASUVADU