தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்க்கு கேட்க வேண்டும்…! ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் கமல்ஹாசன்…!

Default Image

தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்க்கு கேட்க வேண்டும்  என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார்.

இதன் பிறகு போராட்டக் குழுவினர் அவரை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று (ஏப்ரல் 1) கமல் ஹாசன் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார்.குமாரரெட்டிபாளையத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டார் கமல்ஹாசன்.

இந்நிலையில் புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என அவர் கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை, மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும் குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்க்கு கேட்க வேண்டும். இங்கு இருக்கும் அரசுக்கு கேட்ட மாதிரியே தெரியவில்லை.நான் நடிகன் என்பதைவிட மனிதன் எனக்கு கட்சி இருந்தாலும் தனி மனிதனாகவே வந்திருக்கிறேன். ஸ்டெர்லைட் போராட்ட களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் பேசிய கமல்ஹாசன், நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன்.

நான் தமிழன், உங்களுடனான என் உறவு வெறும் மொழியால் மட்டும் ஏற்பட்டதல்ல உணர்வாலும் ஏற்பட்ட உணர்வு இது.உங்கள் மூச்சு பட்ட இந்த வேப்பமரத்து காற்று எனக்கு புது உத்வேகத்தையும் உற்சாகத்தையுன் தந்துள்ளது.குற்றம் கடிதல் அரசின் வேலை, அதை அரசு செய்யவில்லை என்றால் மக்கள் செய்வார்கள்” என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்