இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் இணைந்துள்ள விஜய் 62 படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கத்தி , துப்பாக்கி ஆகிய 2 படங்களின் வெற்றியைத்தொடர்ந்து விஜய் மற்றும் முருகதாஸ் 3 வது முறையாக இணைந்துள்ள படத்திற்கு ’விஜய் 62 ‘ என தற்காலிகமாக பெயரிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் பழ.கருப்பையா , ராதாரவி , வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் இளைஞர்களுடன் விஜய் பைக்கில் ஊர்வலம் செல்வது போன்ற காட்சியை படக்குழுவினர் சென்னையில் படமாக்கி இருந்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் விஜய் நடித்து வரும் இப்படம் அரசியல் , விவசாயம், தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளை கதைக்களமாக கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் இப்படத்திற்கு கோடாரி என பெயரிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் பிறந்த தினமான ஜூன் 22 – ஆம் தேதி படத்தின் பெயரை படக்குழுவினர் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணந்திருங்கள்
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…