தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தனது ரசிகருக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்றைய முன்தினம் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் தனது நற்பணி மன்றத்தை சார்ந்த ரகு என்பவர் உயிரிழந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் , ”துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி எஸ்.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…