தீபாவளியன்று களமிறங்குகிறது தளபதியின் சர்கார்…!தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு …!
விஜய்யின் சர்கார் திரைப்படம் தீபாவளி தினமான நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சினிமா உலகை கலக்கிக்கொண்டு இருக்கிறது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார்.
இந்நிலையில் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிவடைந்து, இந்த படத்தின் விற்பனையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்தது.
இதற்கிடையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்தனர்.
தற்போது தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படம் தீபாவளி தினமான நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#SarkarFromNov6th@actorvijay @ARMurugadoss @arrahman @KeerthyOfficial @varusarath @Lyricist_Vivek @SonyMusicSouth pic.twitter.com/MUsdsi31pA
— Sun Pictures (@sunpictures) October 25, 2018