தீபாவளிக்கு நடையை கட்டும் திமிரு புடிச்சவன்…!!!
நடைகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படம் தீபாவளிக்கு ரிலீஸில் இருந்து ஒதுங்கி விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பாகுபலி எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கணேஷா. இவர் தற்போது நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து திமிரு புடிச்சவன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
பாகுபலி எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கணேஷா. இவர் தற்போது நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து திமிரு புடிச்சவன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி கலக்கியுள்ளார்.அவர் போலீஸாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதில் நடிகை நிவேதா பெத்துராஜும் போலீஸாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பை உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமிரு புடிச்சவன் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஆனால் சர்கார் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு வெளிவர தயாராக உள்ளதால் திடீரென தீபாவளி ரிலீஸில் இருந்து இந்தப் படம் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நவம்பர் 6-ம் தேதிக்குப் பதிலாக 16-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதை உறுதிப்படுத்தும் விதத்தில் படத்தின் புரமோஷன் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.படத்தில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.ஆகவே இந்த தீபாவளிக்கு நடிகர் விஜய்யின் சர்கார் நடிகர் ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி மற்றும் ‘அட்டகத்தி’ தினேஷின் ‘களவாணி மாப்பிள்ளை’ ஆகிய படங்கள் மட்டுமே தீபாவளிக்கு ரிலீஸாக வரிசையில் இருக்கின்றன.
DINASUVADU