Categories: சினிமா

தீபாவளிக்கு தலயா தளபதியா இப்போதே தொடங்கியது மாஸ்டர் பிளான்..!

Published by
Dinasuvadu desk
விஜய், அஜித்குமார் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இரண்டு படங்களையும் தீபாவளிக்கு கொண்டு வரும் முடிவோடு படக்குழுவினர் ஓய்வில்லாமல் வேலை செய்து வருகிறார்கள். இவற்றின் படப்பிடிப்புகளை பாதிக்கு மேல் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

திரையுலகினர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளில் தொய்வு ஏற்பட்டது. ஸ்டிரைக்கால் அஜித்குமார் படப்பிடிப்பை தாமதமாகவே தொடங்கினர். எனவே இரண்டு படங்களும் தீபாவளிக்கு வருமா? அல்லது தள்ளிப்போகுமா? என்று சந்தேகம் நிலவியது.

ஆனால் இரு படங்களும் தீபாவளிக்கு வருவது உறுதி என்று படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். விஜய்க்கு இது 62-வது படம். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இவருக்கும் விஜய்க்குமான கூட்டணி துப்பாக்கி, கத்தி படங்களில் ராசியாக அமைந்தன. அதுபோல் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.Image result for vijay 62

அரசியல் படமாக தயாராகிறது. ராதாரவியும், பழ கருப்பையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தின் தலைப்பையும், முதல் தோற்றத்தையும் விஜய் பிறந்த நாளான வருகிற 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

அஜித்குமாருக்கு இது 59-வது படம். விசுவாசம் என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா டைரக்டு செய்கிறார். அஜித்குமார் – சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் படங்கள் வந்து வரவேற்பை பெற்றன. நான்காவது படத்திலும் இருவரும் இணைந்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துகின்றனர். மும்பைக்கும் செல்கிறார்கள். பழிவாங்கும் கதையம்சத்தில் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அஜித்குமார், அண்ணன்-தம்பியாக இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் பேச்சு உள்ளது.

Recent Posts

புற்றுநோயில் இருந்து மீண்ட ஜெயிலர் பட பிரபலம்… மனைவியோடு உருக்கமாக பதிவு!

சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…

4 minutes ago

அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…

46 minutes ago

அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்.. 10 பேர் பலி!

நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…

1 hour ago

ரிலீஸ் தேதியுடன் வந்த ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…

1 hour ago

மாதவன் பேமிலியுடன் ஜாலியான ட்ரிப்… துபாயில் புத்தாண்டு கொண்டாடிய நயன் – விக்கி!

துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…

2 hours ago

அண்ணா பல்கலை. விவகாரம் – அதிமுக கேவியட் மனு தாக்கல்!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…

4 hours ago