திறமையை காட்டவுள்ள தனுஷ்..!!! அது என்ன படமா இருக்கும் ?
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் வடசென்னை. ஷூட்டிங் பலமுறை தடைப்பட்டு ஒருவழியாக சமீபத்தில் தான் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது.
தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடந்துவரும் நிலையில் பாடல்கள் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதுபற்றி பேசியுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ” பலரும் வடசென்னை பற்றி கேட்கிறார்கள். ஆல்பம் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் பாடல் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும். மியூசிஸியன் தனுஷ் ஸ்பேஸிலான ஒரு விஷயத்தை சேர்த்து வருகிறார் ” என கூறியுள்ளார்.
இவர் ட்வீட்டை பார்த்தால் தனுஷ் ஒரு பாடலை மட்டும் தானே இசையமைத்து உள்ளாரோ என நினைக்கத்தோன்றுகிறது. இது உண்மையாக அறிவிப்பு வந்தால் தான் தெரியும்.