மர்ம நபர்கள் , திருவான்மியூரில் அமைந்துள்ள நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில் தங்க கட்டிகள் மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கங்களை கொள்ளையடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக விளங்கி வருபவர் நடிகர் பார்த்திபன். அழகி, ஆயிரத்தில் ஒருவன், நானும் ரௌடிதான் போன்ற படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இயக்கத்தில் 2016ல் வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் நல்ல விமர்சனத்தை பெற்றது. சமீபத்தில் தான் இவரது மகள் கீர்த்தனாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் மரக்காணத்தில் வசித்து வருகிறார். திருவான்மியூரில் காமராஜர் நகரில் இவரது மற்றொரு வீடு அமைந்துள்ளது. அதை வாடகைக்கு விட்டுள்ளார். வீட்டின் முன்புறமுள்ள சிறுபகுதியை தனது அலுவலகமாக உபயோகித்து வருகிறார். அவ்வப்போது அங்கு சென்று தங்குவது சினிமா சம்மந்தமாக ஆட்களை சந்திப்பது போன்ற பணிகளுக்காக அந்த அலுவலகத்தை உபயோகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பணிப்பெண், வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர்கள் பார்த்திபனின் மேலாளருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த பார்த்திபனின் மேலாளர் அலுவலகத்திற்குள் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதில், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் மற்றும் திரைத்துறையில் செய்த சாதனைகளுக்காக பார்த்திபனுக்கு அளிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பதக்கங்களும் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார். பார்த்திபன் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. எனவே வழக்கினை பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…