நேற்று (ஏப்ரல் 4) திருச்சியில் நடைப்பெற்ற 2 ஆவது கட்சிக்கூட்டத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் நடத்தினார்.
இதற்காக கடந்த (ஏப்ரல் 3) சென்னை எழும்பூரில் இருந்து வைகை ரயில் மூலம் திருச்சி சென்ற கமலுக்கு, சென்னையிலும் சரி திருச்சியிலும் சரி மாபெரும் வரவேற்பு அளிக்கப் பட்டது.
முன்னதாக இந்த கூட்டத்தில் கட்சி நடவடிக்கை குறித்தும்,அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும், கட்சி கொள்கைகளை மக்களிடம் எடுத்து செல்வது குறித்த முக்கிய திட்டங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும்,மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு,இன்றைய கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்.? என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம்நடைபெற்றது.
இதில் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் மட்டுமின்றி,பெரும்பாலான பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…