தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கும் தளபதியின் ரசிகர்கள்!!

Default Image

தளபதி விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தினுள் தீபாவளியன்று வெளியாகி பெரும் சர்ச்சைகளுக்கும் சிக்கி ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தில் ஆளும் கட்சியின் திட்டங்களை விமர்சித்திருப்பதிகாக கூறி படம் வெளியிட்ட தியேட்டர்கள் முன்பு அதிமுக கட்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, விஜய் கடவுட்டுகள், பேனர்களை கிழித்து எறிந்தனர். இதனால் படம் மாரு தணிக்கை செய்யப்பட்டு சில காட்சிக்குள் வெட்டப்பட்டு படம் தியேட்டரில் மறுபடியும் திரையிடப்பட்டது. 

இருந்தும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலியில் சர்கார் திரைப்படம் ராம் சினிமாஸில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு, விஜய் மக்கள் மன்றம் சார்பாக நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. தற்போது காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் ரசிகர் மன்றம் சார்பாக இந்த நிலவேம்பு கசாயம் கொடுத்து வந்தனர்.

source : tamil.cinebar.in 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்