கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அறம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
நயன்தாரா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ‘அறம்’. கோபி நயினார் இயக்கியிருந்த இதில் நயன்தாரா கலெக்டராக நடித்திருந்தார்.
மேலும், ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் – ரமேஷ், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க போராடும் துணிச்சலான கலெக்டராக இந்த படத்தில் நடித்து இருந்தார்.
கவுன்சிலரை கைது செய்து சிறையில் தள்ளியதால் அரசியல்வாதிகள் கோபத்துக்கு ஆளாவதும் இதனால் பதவியை துறந்து மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் ஈடுபட தயாராவது போன்றும் படத்தை எடுத்து இருந்தனர்.
தற்போது, இதன் 2-ஆம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவே நடிக்கவிருக்கும் இந்த படத்தையும் கோபி நயினாரே இயக்கவுள்ளார், கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. தற்போது படத்தின் ஆரம்ப பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…