ஒருநாள் கூத்து படத்தின் மூல அறிமுக ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி,ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக்,விஷ்ணு விஷாலுடனும் ஒரு படம் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் நாட்டில் நிறைய பிரச்னைகள் சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒருசில பிரச்னைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
அதில் ஒன்றுதான் பெண்கள் பாதுகாப்பு. இந்த வீடியோவை பார்க்கும் நிறைய பெண்களும் சரி, ஆண்களும் சரி சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பார்கள். நான் உள்பட.
5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி அம்மா.. அப்பாவிடம் சென்று எப்படி சொல்ல முடியும்?
எனக்கு அப்போது என்ன நடந்தது என எதுவும் தெரியாது. பொதுவாக இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் எல்லாம் நமக்கு தெரிந்த உறவினர்கள், பக்கத்துவீட்டுக்காரர்கள் மூலமாகத் தான் நடக்கும்.
எனவே எல்லா பெற்றோர்களும் தயவு செய்து பொறுப்புடன் இருங்கள். உங்கள் குழந்தையின் முன் அமர்ந்து பேச ஆரம்பியுங்கள். யாரு எப்படி
பேசினால் தப்பு எப்படி தொட்டால் தப்பு என இரண்டு வயதில் இருந்தே பேச ஆரம்பியுங்கள்.
குழந்தைகளுக்கு பள்ளியில் என்ன நடக்கிறது என தெரியாது. டியூசனில் என்ன நடக்கிறது என தெரியாது.
எனவே சிறுவயதில் இருந்தே பாதுகாப்பு குறித்து சொல்லிக் கொடுங்கள். ஒவ்வொரு தெருவில் வசிக்கும் ஆண் நண்பர்களும் ஒரு எட்டு பத்து பேராக குழுவாக இணைந்து உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என கண்காணியுங்கள்.
எல்லாவற்றிற்கும் நாம் போலீஸை நம்பியே இருக்க முடியாது. தற்போது எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரை பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்க தோன்றுகிறது.
பாலியல் துன்புறுத்தல் மிக தவறானது. இதனை அழித்தால் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம்” என்றார்
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…