தஸ்தயேவ்ஸ்கி-குழந்தைகளின் வாழ்வியலை அழகாக காட்டும் உலக சினிமா ….!
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு வினாடியும்,உங்கள் மீது உங்களுக்கு கவனம் இருக்க வேண்டும் .உங்கள் தோற்றத்தில் கவனம் இருக்க வேண்டும் .குறிப்பாகக் குழந்தைகளை கடந்து போகும் போது ,உங்கள் இதயத்தில் சினம் இருக்கக்கூடாது,உங்கள் வாயிலிருந்து தீய சொற்கள் வெளிப்படக் கூடாது ,நீங்கள் குழந்தையைக் கவனிக்காமல் போகலாம்,ஆனால்,குழந்தை உங்களைக் கவனிக்கும்,உங்களது மோசமான நடத்தை ,மோசமான சொற்கள் அந்தக் குழந்தையைப் பாதிக்கும் ,களங்கமில்லா அதன் இதயத்தை சீர்குலைக்கும் . கவனமில்லாமலேயே நீங்கள் விதைத்துவிடும் நச்சு விதை ,ஒரு குழந்தைக்குள் விழுந்து முளைவிடும் .ஒரு குழந்தையின் முன்னால் நீங்கள் உங்களைக் கட்டுபடுத்திக் கொள்ள முடியாமற் போனதால் மற்றவர் மீது தீவிர நேயம் கொள்ள முடியாமற் போனதால் ,ஒரு பண்பாட்டை உருவாக்கிக் கொள்ள முடியாமற் போனதால் அந்தக குழந்தையின் மனதை சீர்குலைத்து விடுகிறீர்கள் சகோதரர்களே….
தஸ்தயேவ்ஸ்கி:
ஒரு சிதைவுற்ற குடும்பத்தின் வாழ்வினூடாக,அந்தக் குடும்ப உறுப்பினர்களின் மனநிலையினூடாக ஸ்பானிய சர்வாதிகாரி ப்ராங்கோவின் ஆட்சியை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவது ஒரு பக்கம் இருந்தாலும், குழந்தைகள் தான் காண்கின்ற காட்சிகளை,பார்க்கின்ற திரைப்படங்களை தவறாகப் புரிந்துகொள்ளும் போதும், தான் பார்ப்பதை ,கேட்பதையெல்லாம் உண்மையென நம்ப ஆரம்பிக்கும் போதும், அவர்களின் அகத்தினுள் நிகழ்கின்ற அலைக்கழிப்புகளை,போராட்டங்களை அற்புதமாக சித்தரிக்கிறது இத்திரைப்படம்..
நாம் அனைவரும் காண வேண்டிய படம்….