தளபதி 63: சரியான கூட்டணி..! வெற்றி உறுதி..! அதிர்ச்சியில் திரையுலகம்..!
தொடக்கத்தில் நடிகர் விஜய் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை ” தளபதி” என்று அழைக்கிறார்கள்.
மேலும் அடுத்தடுத்து பல படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டியுள்ளார். பின்பு ரசிகர்களின் நீங்காத புகழையும் இடத்தையும் பெற்றார். இவர் தற்போது துப்பாக்கி, கத்தி என இரண்டு ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மூன்றாவது படத்தில் நடித்து வருகிறார் விஜய். “சர்கார்” என்று தலைப்பிடபட்டுள்ள இந்த படத்திலும் ஒரு சமூக விஷயத்தை கையிலெடுத்திருக்கிறார் முருகதாஸ்.
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அதில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கலாம் என தகவல் வெளியானது.ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆனால் தற்போது விஜய் தரப்பில் இருந்து இன்னொரு செய்தி கசிந்துள்ளது. ஏற்கனவே விஜய்யை வைத்து “வேலாயுதம்” படத்தை இயக்கிய மோகன்ராஜா விஜய்யின் “தளபதி63″ படத்தை இயக்குவதாகவும், இது தனி ஒருவன் பாணியிலான அட்டகாசமான போலீஸ் கதை என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.எதுஉண்மை என்று.