மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.
இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார்.நடிப்பிலும் பிக் பாஸ் 2 விலும் கவனம் செலுத்தி வந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் கருத்துகளை பதிவிடுகிறார்.ட்விட்டர் மூலம் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி ரசிகர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் நறுக்கென்று பதில் கூறியுள்ளார்.
ரசிகரின் கேள்வி: உங்கள் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு கமல்ஹாசன் எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என்று நறுக்கென்று பதில் கூறினார்.
கமல்ஹாசன் இவ்வாறு குரிய நாள் முதலே விஜய் ரசிகர்கள் இதை சமூக வலைதளங்களில் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாடியது எப்படியோ அவரது காதுக்கு சென்று விட்டது.உடனே இதை அறிந்த நடிகர் விஜய் தொலைபேசி மூலம் மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமஹாசனுக்கு நன்றி தெரிவித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இந்த தகவலை நடிகர் விஜயின் தரப்பு உறுதியாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…