தளபதி விஜயை அரசியலுக்கு அழைத்த கமல்ஹாசன்!அழைத்ததற்காக விஜய் கமலுக்கு நன்றி!

Default Image

மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.

இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார்.நடிப்பிலும் பிக் பாஸ் 2 விலும் கவனம் செலுத்தி வந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் கருத்துகளை பதிவிடுகிறார்.ட்விட்டர் மூலம் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி  ரசிகர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் நறுக்கென்று பதில் கூறியுள்ளார்.

ரசிகரின் கேள்வி: உங்கள் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு கமல்ஹாசன் எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என்று நறுக்கென்று பதில் கூறினார்.

கமல்ஹாசன் இவ்வாறு குரிய நாள்  முதலே விஜய் ரசிகர்கள் இதை சமூக வலைதளங்களில் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாடியது எப்படியோ அவரது காதுக்கு சென்று விட்டது.உடனே இதை அறிந்த நடிகர் விஜய் தொலைபேசி மூலம் மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமஹாசனுக்கு நன்றி தெரிவித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இந்த தகவலை நடிகர் விஜயின் தரப்பு உறுதியாக  கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்