தளபதி ரசிகர்களுக்கு மெர்சலான செய்தி …!காந்தி ஜெயந்தி அன்று வெளியாகிறது …! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் …!
விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது.
சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால் இந்த விஷயம் ரசிகர்களுக்கு சிறிது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் சர்காரை கொண்டாடவே செய்தனர் விஜய் ரசிகர்கள்.
இந்நிலையில் படத்தின் பெருபாலான காட்சிகளின் படப்பிடிப்பை இந்தியாவில் முடித்த கையோடு இப்படத்திற்கான சில காட்சிகளையும், பாடலையும் படம் பிடிக்க படக்குழுவினர் அமெரிக்கா சென்று படமாக்கினார்கள்.இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என படகுழு அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பின்படி ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
#SarkarAudioFromOct2nd@actorvijay @ARMurugadoss @arrahman @KeerthyOfficial @varusarath pic.twitter.com/Dzel8bifCT
— Sun Pictures (@sunpictures) August 24, 2018