தளபதியின் அடுத்த படத்தில் ஹீரோயின் சமந்தாவா? நயன்தாராவா? : குழப்பத்தில் அட்லி!!
சர்கார் படத்தின் சர்ச்சையான மெகா ஹிட்டை தொடர்ந்து, தனது அடுத்தப்பட வேலைகளில் களமிறங்க உள்ளார் தளபதி. அடுத்தப்படத்தை அட்லி இயக்கப்போவது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதும் முடிவாகிவிட்ணது.
தற்போது அடுத்தகட்ட வேலையாக படத்தில் யார் தளபதியுடன் ரொமான்ஸ் செய்ய போகிறார் என்பதுதான்.
சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டத்தை இயக்குனர் அட்லி அவரது நண்பர்களான, விக்னேஷ் சிவன் , நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் கொண்டாடினார். ஒரு வேளை படத்தின் ஹீரோயின் நயன்தாராவோ என சிலர் முனுமுனுக்க, சில நெருங்கிய வட்டாரங்கள் ஏற்கனவே கத்தி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படத்தில் டூயட் பாடிய சமந்தாதான் ஹீரோயின் என கூறி வருகின்றனர். இன்னும் அதிகாரபூர்வ தகவல் தயாரிப்பு தரப்பு வெளியிடும் வரை தளபதி ரசிகர்கள் காத்திருக்கதான் வேண்டும்.
Source : tamil.CINEBAR.IN