தளபதிக்கு நிகர் தளபதி தாங்க…! விஜயின் மெர்சல் சீனாவில் இத்தனை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகிறதா…?
விஜய் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸாகியிருந்த படம் மெர்சல் . அட்லீ இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களுக்கிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்தியா முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்திருந்த இப்படம் தற்போது அண்டை நாடான சீனாவுக்கு சென்றுள்ளது, அது மட்டுமன்றி முடனமுறையாக சீனாவில் ரிலீசாகும் தமிழ் படம் என்ற சாதனை பிடித்துள்ளது.
வருகிற டிசம்பர்-6ல் ரிலீஸாகவுள்ள இப்படம் சீனாவில் மட்டும் 10000 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்படவுள்ளதாம். அங்கு இருக்கும் 40000 தியேட்டர்களில் விஜய் மெர்சல் 10000 தியேட்டர்களை ஆக்கிரமிக்கவுள்ளது.
இந்த படத்தை அமீர்கானின் டங்கல், சீக்கரெட் சூப் ஸ்டார்ஸ் போன்ற படங்களை சீன மொழிக்கு டப்பிங் செய்த நிறுவனத்திடம் கொடுக்க திட்டமிட்டு வருகிறாராம்.