தல -தளபதியை வம்புக்கு இழுத்த சித்தார்த்!ரசிகர்களிடம் வாங்கிகட்டிய அவலம் ….
‘பாவம் விஜய், அஜித், ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 1 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கடந்த 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங், சென்னையிலுள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இதனால், ‘விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷலா?’ என்று மற்ற தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த விஷயம் பரபரப்பாக, ‘விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுக்கவில்லை. சமுத்திரக்கனி இயக்கிவரும் ‘நாடோடிகள் 2’ உள்பட இன்னும் சில படங்களுக்கும் சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது’ என தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் நேற்று தெரிவித்தார்.
ஆனாலும், பல பேர் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். நடிகர் சித்தார்த்தும் தன் பங்குக்கு ட்விட்டரில் பொங்கியுள்ளார்.
“இன்றைய மிருகத்தனமான சினிமா மார்க்கெட்டில், எல்லாப் படங்களுமே மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகின்றன. ஒரு படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுக்காமல், எல்லாப் படங்களுக்கும் அனுமதி கொடுங்கள். நாம் எல்லாருமே சமம். அந்த ஒற்றுமை குலைந்தால் கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசு இதுவரை சினிமா மீது அக்கறை கொள்ளவில்லை, இனிமேலும் கொள்ளப் போவதில்லை. நூற்றாண்டு காலமாக இப்படித்தான் நடந்து வருகிறது. அவர்கள் சினிமா மீது அக்கறை கொண்டு மாற்றம் செய்வது என்பது அதிசயமாக நடந்தால் தான் உண்டு. சினிமாத்துறையின் ஒற்றுமையை முதலில் காட்டுவோம். மாற்றம் தானாக வரும்.
இழிந்த மொழி, தேவையில்லாத விஷம், சம்பந்தமில்லாத கோபம். இரண்டு குழுக்களில் இருக்கும் வேலையில்லாத சில முட்டாள்கள், அனைவரின் பெயரையும் நேரத்தையும் வீணாக்குகிறார்கள். பாவம் விஜய் – அஜித்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அதன் பின் அவருடைய டிவிட்டர் டைம்லைனில் விஜய், அஜித் ரசிகர்களை அவருக்கு பல்வேறு விதமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.