தல அழைப்புக்காக காத்திருக்கிறேன்! விஜயின் பிளாக் பஸ்டர் இயக்குனர் ஓபன் டாக்!!!
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் தல அஜித்தை நடிப்பில் வெளியான தீனா படம் தான். அந்த படத்திலிருந்துதான் அஜித்திற்கு தல என்கிற பட்டமும் கிடைத்தது. அந்த படம் மாஸ் ஹிட்டாக அமைந்தது. அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இது பற்றி ரசிகர்கள் பலர் எப்போது தலயை வைத்து படம் இயக்க போகிறீர்கள் என கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
தற்போது அது பற்றி ஒரு பேட்டியில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், சுமார் 7-8 வருடமாக இந்த கேள்வியை ரசிகர்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். நான் அவருக்காக மாஸான கதை ஒன்று எழுதி வைத்துள்ளேன். அவர் கூப்பிட்டால் உடனே அதனை படமாக்கி விடவேண்டியதுதான் என கூறினார்.
source : cinebar.in