தல அஜித்குமார் தற்போது வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. இப்படத்தை பொங்கலுக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தல-இன் அடுத்த படத்தை யார் இயக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதில் ஒரு சிலர் தீரன் படத்தை இயக்கிய H.வினோத் தல படத்தை இயக்க உள்ளார். அது பாலிவுட்டில் ஹிட்டான அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் என்றும் அதனை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வேகமாக பரவி வந்தன. இதனை மறுத்து இயக்குனர் வினோத் பெயரில் ஓர் டிவிட்டர் கணக்கிலிருந்து ஒரு செய்தி பரவியது அதில் தான் இயக்கப்போகும் அடுத்த படம் ரீமேக் படம் இல்லை என்று கூறபட்டிருந்தது.
பிறகுதான் தெரிய வந்தது இயக்குனர் வினோத்திற்கு டிவிட்டர் கணக்கு இல்லையாம். அணைத்து செய்திகளும் வதந்தியாம். அதிகாரபூர்வ செய்தி எதுவாயினும் படக்குழுவே அறிவிக்கும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அஜித்தின் நெருங்கிய வட்டாரம் கூறுகின்றது.
source : cinebar.in
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…