‘வீரம்’ ‘வேதாளம்’ ‘விவேகம்’ படங்களை தொடர்ந்து தல அஜித்குமாரும், இயக்குனர் சிவாவும் இணைந்திருக்கும் படம் ‘விஸ்வாசம்’. கடைசியாக இவர்கள் கூட்டணியில் வெளிவந்த விவேகம் மக்களிடம் வரவேற்ப்பை பெற தவறிவிட்டது. ஆதலால் இப்படத்தை எப்படியும் ஹிட்டாக்க இயக்குனர் கடுமையாக போராடி வருகிறார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக இருந்தது. பின்னர் இச்செய்தி மறுக்கப்பட்டது. பிறகு விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் இதுவும் உறுதி செய்யப்படவில்லை.
தற்போது புது தகவலாக நடிகர் சிம்புவை இப்படத்திற்கு இசை அமைக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சமீபத்தில் வெளியான சந்தானம் ஹீரோவாக நடித்த ‘சக்கபோடு போடு ராஜா’ எனும் படத்திற்க்கு இசை அமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் குறித்து சர்ப்ரைஸ் செய்தி ஒன்று வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…