தற்கொலைக்கு முயன்றேன்…….யாரும் அறிந்திராத ஆஸ்கார் நாயகனின்…….அதிர வைக்கும் மறுபக்கம்..!!
நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று ஆஸ்காரர் நாயகன்,இசை புயல் இசையமைப்பாளர் AR ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளது ரசிகர்களில் மத்தியில் யாரும் அறிந்திராத அவருடைய மறுபக்கத்தை காட்டிகொடுத்துள்ளது.எத்தனை வெற்றி, எத்தனை புகழ்,எத்தனை விருதுகள் என்றாலும் சற்றும் முகத்தில் ஒரு தெளிவான தோரணையோடு அமர்ந்தும்,விருது வாங்கும் பொழுது எல்லா புகழும் இறைவணுக்கே என்று அன்னார்ந்து கூறுவதும் இன்னும் கண்களில் காட்சியாய் வலம் வந்து கொண்டிருக்கிறது.
AR ரகுமான் என்றால் ஹீட் பாடல்கள்,படு மாஸ் கிளாஸ் என்று ரசித்து பார்த்த நமக்கு அவருடைய மறுபக்கத்தை பற்றி யாரும் அறியமாட்டார்கள் அப்படி அறியவே இந்த The Authorized Biography of AR Rahman வெளியிடப்பட்டுள்ளது.இந்த புத்தகம் இசை புயலின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறுகிறது.அதில் ரகுமான் என்னுடைய 25வது வயது வரை தற்கொலை எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்திருந்தது என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் Notes of a Dream: The Authorized Biography of AR Rahman” என்ற புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வெளியிட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.அதில் இந்த நாடு ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளனின் திறமையை அடையாளம் காண்பதற்கு முன்பு வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியைச் சந்தித்தவன். என்னுடைய ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்துகொள்ள தான் எண்ணினேன். அந்த கடினமான நாட்கள் தான் என்னை எதிர்காலத்தில் எதையும் எதிர்கொள்ள கூடிய மனநிலையை உருவாக்கியது.
மேலும் என்னுடைய 25-வது வயது வரை தற்கொலை நான் செய்துகொள்ள தான் விரும்பினேன்.இந்த எண்ணம் என் தந்தையின் இழப்பும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த காலக்கட்டத்தில் ருவகையான வெறுமையை என்னுள் தோன்றியது. இந்த வெறுமையே என்னை ஒருவகையில் அச்சமற்றவனாக மாற்றியது என்று தான் கூற வேண்டும். இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது தான் அது எதுவாக இருந்தாலும் உருவாக்கப்படும்போதே முடிவு எழுதப்பட்டிருக்கிறது.