Categories: சினிமா

தமிழ் படம் 2.O’! படம் திரையில் 25;தமிழ் ராக்கர்சில் 26 தேதி..

Published by
Venu

‘தமிழ் படம்’ படத்தின் 2-ம் பாகத்திற்கு ‘தமிழ்படம் 2.O’ என பெயரிட்டு இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு டிசம்பர் 11-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் சஷிகாந்த், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை டிசம்பர் 12 காலை 9 மணிக்கு அறிவிப்பார் என தெரிவித்திருந்தார்.
Image result for aishwarya menon
அதன்படி நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “எல்லாமே இனிமே ஒரு மாதிரி தான் நடக்கும். ‘தமிழ்படம் 2.O’ வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிடுவதில் சந்தோஷப்படுகிறேன்” என்று கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

அப்போஸ்டர் தான் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. ‘தமிழ்படம் 2.O’ போலீஸ் அத்தியாயம் என்று படத்தின் லோகோ வடிவமைக்கப்பட்டு இருந்தது. மே 25-ம் தேதி பட வெளியீடு என்றும், மே 26-ம் தேதி தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியீடு என்று படத்தின் போஸ்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும், ஆன்லைன் திருட்டு பங்குதாரர் (Online Piracy Partner) என்று தமிழ் ராக்கர்ஸ் லோகோ போட்டுள்ளார்கள்.

‘தமிழ் படம்’ திரையுலகில் வெளியான முன்னணி படங்களின் காட்சிகளை கிண்டல் செய்து எடுத்த படமாகும். அதன் 2-ம் பாகத்தின் போஸ்டர் வடிவமைப்பிலேயே படக்குழு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இப்படத்தின் நாயகனாக சிவா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அவர்களோடு சதீஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், அஜய் ரத்னம் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். ‘தமிழ்படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதனே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

Recent Posts

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

12 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

13 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

14 hours ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

15 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

15 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

16 hours ago