தமிழ் திரையுலகில் இணையும் புதிய கூட்டணி..!
நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகிபாபு, மீண்டும் அவருடன் இணைந்து கே.எம்.சர்ஜுன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். மேலும், அஜித்தின் ‘விசுவாசம்’ படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகை அஞ்சலி நடிப்பில் ‘பேரன்பு’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. மேலும், சசிகுமார் ஜோடியாக ‘நாடோடிகள் 2’, ‘காண்பது பொய்’, ‘ஓ’, ‘கீதாஞ்சலி 2’, ‘குண்டூர் டாக்கீஸ் 2’, பெயரிடப்படாத விஜய் சேதுபதி படம் ஆகியவற்றில் தற்போது நடித்து வருகிறார்.
யோகிபாபு மற்றும் நடிகை அஞ்சலி இருவரின் கூட்டணியில் படம் வெளிவரவுள்ளது. அந்த படத்தின் பெயர் ‘லிசா’…