தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக உங்கள் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகருக்கான பிரத்தியேக விருது!
100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக வெள்ளித்திரை நகைச்சுவை நட்சத்திரங்களை கவுரவிக்கும் மாபெரும் நிகழ்வு , உங்கள் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகருக்கான பிரத்தியேக விருது.
கற்பனைகளை நிஜமாக்கி ,திறமைகளை அரங்கேற்றும் ஓர் கனவு தொழிற்சாலை விஜய் டிவி .
இது பொழுதுபோக்கு ஊடகங்களின் ஓர் தவம் ! 7 கோடி தமிழர்களின் முகம்!
தனது தன்னிகரற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு படைப்பிலும் உச்சம் தொடும் விஜய் தொலைக்காட்சியின் அடுத்த பிரம்மாண்ட முயற்சி விஜய் காமெடி அவார்ட்ஸ் .நகைச்சுவை மன்னருக்கான மணிமகுடம் .
காதல்,கோவம்,வீரம்,அழுகை என நவரசங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் அள்ளி தெளித்த தமிழ் சினிமாவில் நகைச்சுவை பாலூட்டி , பல தலைமுறைகளை தாலாட்டிய , மறந்த,மறைந்த, மகத்தான நகைச்சுவை கலைஞர்களை நினைவலைகளால் அலங்கரித்தது .
இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் .
நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவரது முகம் பதித்த விருது வழங்கப்பட்டது .
விருது பெற்றவர்களின் பட்டியல் :
சிறந்த துணை நகைச்சுவை நடிகர் பெண்கள் : தேவதர்ஷினி (சங்கிலி புங்கிலி கதவ தோற )
சிறந்த துணை நகைச்சுவை நடிகர் ஆண்கள் : டேனியல் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா )
2017 ஆம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகர் : முனிஷ் காந்த (மாநகரம்)
சிறந்த நகைச்சுவை உரையாடல் எழுத்தாளர் : கிரேசி மோகன்
சிறந்த நகைச்சுவை ஜோடி : பார்த்திபன் மற்றும் வடிவேலு
சிறந்த நண்பர் நகைச்சுவை நடிகர் : சதீஷ் (எதிர்நீச்சல்)
2017 தசாப்தத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் : சூரி (வெண்ணிலா கபடிக்குழு )
புகழ்பெற்ற பங்களிப்பு விருது : பாக்கியராஜ்
சிறந்த வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் : ரோபோ சங்கர் (மாரி )
மிகவும் நம்பத்தகுந்த நகைச்சுவை நடிகர் : யோகி பாபா (மான் கராத்தே )
சிறந்த நகைச்சுவை விருது : சிம்பு தேவன் (23 ஆம் புலிகேசி )
சிறந்த நகைச்சுவை வில்லன் விருது : ஆனந்த் ராஜ் (நானும் ரவுடி தான் )
சிறந்த சமூகநல நகைச்சுவை திரைப்படம் : ஜோக்கர் (M R ராதா விருது )
வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர் : காளி வெங்கட்(முண்டாசுப்பட்டி ), ரமேஷ் திலக் (காக்கா முட்டை )
மிகவும் பிடித்த ஜூனியர் : ரமேஷ் (காக்கா முட்டை)
வாழ்க்கை முழு சாதனை : கவுண்டமணி & செந்தில்