கடந்த 45 நாட்களுக்கும் மேலாக நடந்த வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக் ஒரு வழியாக பல மாற்றங்களுடன் முடிவுக்கு வந்தது. வரும் வாரம் முதல் பழையபடி படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் மே 9ம் வெளிவரவுள்ள ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’. அது தமிழில், ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது.
இப்படத்தின் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றுது. இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தமிழ் சினிமா நடிகர்களால் நான் தெலுங்கு பக்கமே போகிறேன் என்று விரக்தியாக பேசினார்.
அவர் பேசுகையில், தெலுங்கு இன்டஸ்ட்ரிகிட்ட இருந்து நாம கத்துக்கவேண்டியது நிறையவே இருக்கு. சின்னச்சின்ன விஷயங்களைச் சரி செஞ்சாச்சு. ஆனால், நடிகர்கள் சம்பளம் மாதிரியான பெரிய விஷயங்களை நடிகர் சங்கம் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். உதாரணத்துக்கு, தமிழ்ல 100 கோடி ரூபாய் வியாபாரம் இருக்குன்னா, 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்குறாங்க. அதுல 10 கோடி ரூபாய் அட்வான்ஸா கேட்குறாங்க. ஆனா, தெலுங்குல 15 கோடி ரூபாய் சம்பளமும் 50 லட்ச ரூபா அட்வான்ஸும் கொடுத்தா போதும்.
அந்த புரிதல் தெலுங்கு நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நிறையவே இருக்கு. அதனாலேயே அந்த இன்டஸ்ட்ரியே சுபிக்ஷமா இருக்கு. தமிழ்ல அப்படி இல்லை. சுயநலமா நிறைய விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. போன மீட்டிங்ல கார்த்தி பேசுன மாதிரி, வியாபாரத்தைக் கணக்கிட்டு நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் பண்ணணும்.
மத்த செலவு எல்லாம் சேர்க்காமல், நடிகர்கள் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு பல லட்சங்கள் செலவாகுது. எல்லோரும் தயாரிப்பாளர் நிலைமையைப் புரிஞ்சு நடந்துக்கணும். இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள இந்தச் சூழல் மாறணும். நான் ஏற்கெனவே அங்க ஒரு ஆபீஸ் வாங்கிட்டேன். தமிழுக்கு டாடா சொல்லிட்டு போய்டலாம் இருக்கேன்
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…