தமிழ் சினிமாவில் படமாகிறது ஜல்லிக்கட்டு..!
இந்தியில் முக்கிய இயக்குனர் அனுராக் காஷ்யப். திரைக்கதையில் ஜாம்பவான் எனப்படும் அனுராக் நயன்தாராவின் `இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமிழில் உருவாகும் ஒரு படத்துக்கு இணை தயாரிப்பாளராக இருந்து உருவாக்கி வருகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னெழுச்சியாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம். உலக அளவில் பரபரப்பாக்கிய இந்த போராட்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்து போராட்டத்தின் பின்னணி, கலந்துகொண்டவர்கள் அதற்காக கூறும் காரணங்கள், உலக அளவில் நடந்த போராட்ட வடிவங்கள் ஆகியவையையும் சேர்த்து ஒரு படமாக மாற்றி இருக்கிறார்கள். முக்கியமாக ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத உலக தமிழர்கள் ஒன்றுபட்டு போராடியது எவ்வாறு என்பது இந்த படம் மூலம் தெரியவரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் படத்தின் இயக்குனர் சந்தோஷ். உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் கென்யா நாட்டில் உள்ள மசாய்மாரா பகுதியிலும் படம் பிடித்த முதல் தமிழ் படம் இதுதான்.
மசாய்மாரா பகுதியில் உள்ள காளைகள் நமது பகுதி காளைகள் இனத்தை சேர்ந்தவை என்பதால் அங்கே சென்று படமாக்கி இருக்கிறார்கள். அகிம்சா புரடக்ஷன் சார்பில் அனுராக் காஷ்யப் மற்றும் நிருபமா இணை தயாரிப்பில் உருவாகி இருக்கிறது இந்த ஜல்லிக்கட்டு படம்.