தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து ….! அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம்’ …!
கமல்ஹாசன் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம்’ என தெரிவித்துள்ளார்.
நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என உறுதி ஏற்போம்.
மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம். தமிழர், தமிழால் இணைவோம். நாளை நமதே” எனத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.