தமிழ்நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் ?பெயரை மாற்றும்வரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன்” – இயக்குநர் பாரதிராஜா சபதம்….
இயக்குநர் பாரதிராஜா தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றும்வரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன்’ என சபதம் ஏற்றுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் நேற்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், முக்கியமான பலர் கலந்து கொள்ளவில்லை.
இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் பாரதிராஜாவிடம், ‘நீங்கள் ஏன் நேற்றைய போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
“மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்படாததற்கு முன்பு அனைத்துக்கும் மையமாக சென்னை இருந்தது. ஆனால், இன்று எல்லாமே தனித்தனியாக அவர்களுக்கென அமைப்பு வைத்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று மாற்றப்படவில்லை. எனவே, இந்தப் பெயரை மாற்றும்வரை அதுசார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று சபதம் ஏற்றுள்ளேன்” எனப் பதிலளித்துள்ளார் பாரதிராஜா.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.