தமிழ்நாடே போராட்டக்களத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், நம் மீது அலட்சியம் ஏன்?ஒருவழியாக வாயைத்திறந்த தல அஜித் நடிகர் …..!
நடிகர் அருண்விஜய் காவிரி விவகாரம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடே போராட்டக்களத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், நம் மீது அலட்சியம் ஏன்? நாம் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை! நாம் நம் உரிமையைக் கேட்கிறோம். அதை பெற்றுத்தருவது அவர்களின் கடமை. நம் இந்திய நாட்டிலேயே அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்று தமிழகம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். உடனடி தீர்வு அவசியம். வந்தாரை வாழவைக்கும் நம் தமிழ்நாடு, இன்று அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. அதை காக்க வேண்டியது தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் கடமை” என நடிகர் அருண்விஜய் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.