தமிழிசைக்கு சவால் …!ஐடி வந்தால் எதுவும் தேறாது …!சத்யராஜ் ஓபன் …!
எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்,ஐடி வந்தால் எதுவும் தேறாது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் ஐடி வந்தால் எதுவும் தேறாது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.காவிரி பிரச்னை உள்ள சூழலில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம்.மேலும் போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி நடக்கிறது என்றும் சத்யராஜ் தெரிவித்தார்.
இதற்கு முன் அவர் , “சபை நாகரிகம் கருதி, நடிகர் சங்கம் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு, பேச வேண்டாம் என நினைத்தேன்.
நான் என்றுமே தமிழர்களின் பக்கமும் தமிழ் உணர்வாளர்களின் பக்கமும் தான் இருப்பேன். தமிழர்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்.
எந்த அடக்குமுறைக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம்.
குரல் கொடுக்க தைரியம் இருப்பவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லையெனில், ஓடி ஒளிந்துகொள்ளுங்கள்” என்று ஆவேசமாக முழங்கினார் சத்யராஜ்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.