தமிழன்னா ‘நீ’தாய தமிழே..!ஜி.விக்கு குவியும் பாராட்டுகள்..!அப்படி என்ன செஞ்சாரு..!நீங்களே பாருங்க ..!!
தமிழகத்தில் மூடப்படும் அரசுப்பள்ளிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் அதிரடியாக இறங்கியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
“கல்வி என்பது எல்லோருக்குமான அடிப்படை தேவை. அது எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் நிறைய அரசுப்பள்ளிகள் தற்போது மூடப்படும் நிலையில் உள்ளது. ஏற்கெனவே இங்கு கல்வி வியாபாரமாக மாறி கொண்டே வருகிறது.
அப்படி பார்க்கப்போனால் இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி என்ற ஒன்றே சாத்தியமில்லாமல் போய்விடும். உலக அளவில் சாதித்த பல தமிழர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாகத்தான் இன்றும் இருந்திருக்கிறார்கள்.ஆனால் கடந்த சில காலமாக 890 அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது. காரணம் அங்கு 50-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர்.
அங்கு அப்படி என்றால் நகரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இதை மாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியாக சென்னையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி, யு.கே.ஜி சொல்லித் தரும் ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுள்ளேன். எனது ரசிகர்கள் மற்றும் அயல்நாட்டில் இருக்கும் தமிழர்கள் இதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளியை தத்தெடுத்து உதவிட வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
மூடு விழா காணும் அரசே கண்டு கொள்ளவில்லை ஏழைக்களின் ஏட்டு கல்வியை நீயோ ஏட்டு கல்வியை கொடுப்போம் என்று எட்டாத தூரத்தில் இருப்பவரையும் எள்ளம்புட்டாவது செய்தாலும் போதும் என்று விழிப்புணர்வு பெருகட்டும் என்று கூறிய பெருந்தன்மை வாய்ந்த மனதிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.கொடுத்தது சிறியது என்றாலும் இங்கு அப்படி கொடுப்பவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்.அரசு பள்ளியில் படித்தாலும்,சரி இல்லையென்றாலும் சரி நாமும் அரசு பள்ளிக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.
#education … keep spreading this .. let’s unite together for a better tomorrow pic.twitter.com/x9wvnIGsvR
— G.V.Prakash Kumar (@gvprakash) September 9, 2018
DINASUVADU