தமிழக மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த், தமிழ் புத்தாண்டு வாழ்த்து…!
நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு , தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக் கூட போராட்டம் என்றும், வாழ்க்கையே போராட்டக் களமாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று பிறக்கும் தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும், அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள் வேண்டும் என்று தெரிவித்துள்ள ரஜினிகாந்த், புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.