பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அஜித் படத்தில் ஓபனிங் பாடலை எழுத வேண்டும் என்று கூறியுள்ள வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் ரவி அவானா நடித்து வருகிறார்.
அஜித்தின் விஸ்வாசம் படத்தை பொங்கலுக்கு ரீலிஸ் செய்யவர படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா என்பவர் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோ சுமார் 2 நிமிடத்திற்கும் குறைவாக ஓடுகிறது அதில், “நான் புதுக்கோட்டையின் தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறேன். எனது பெயர் சரோஜா. நான் அஜித்தின் ஆரம்ப பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு கேட்டு புதுக்கோட்டையிலிருந்து ஆட்டோவில் சென்னைக்கு பயணிக்கிறேன்.
அஜித்தைப் பற்றி 2 பாடல்களும், கவிதைப் புத்தகம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளேன். அதை நடிகர் அஜித்திடம் கொடுக்க வேண்டும். நடிகர் அஜித்தின் படத்தில் எனது பாடல் இடம்பெற்றால் அதை நான் செய்த பாக்கியமாக நினைக்கிறேன்.இதற்கு அஜித்தின் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்து புன்சிரிப்போடு அஜித்தை காண சென்னை நோக்கி பயணிக்கிறார் சரோஜா.தல தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்றி வைப்பாரா என்று சினிமா வட்டாரங்களில் சலசலப்பு எழுந்துள்ளது.
DINASUVADU
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…