தன்னை கேலி செய்தவர்களுக்கு நடிகை ஆத்மீகா என்ன பதிலடி கொடுத்துள்ளார் தெரியுமா…?

Default Image
  • நடிகை ஆத்மீகா மீசைய முறுக்கு படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
  • உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்’’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை ஆத்மீகா மீசைய முறுக்கு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில், நேற்று மகளீர் தினத்தையொட்டி, ஆண் நடிகர்கள் பெண் வேடமிட்ட கதாபாத்திரங்களின் முகங்களை வைத்து ஆத்மிகாவின் புகைப்படத்தையும் சேர்த்து கிண்டலாக `பெண்கள் தின வாழ்த்துகள்’ என்று பதிவிட்டு ஒரு மீம் தயார் செய்துள்ளனர்.

இதனையடுத்து, இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் அந்த மீம்ஸை பதிவிட்டு, இதுபோல் அசிங்கமான சிந்தனையோட உன்னைச் சிறு வயதிலிருந்து இப்படி வளர்க்கப்பட்டு இருக்கிறாயே என்று வருத்தப்படுகிறேன்.

மேலும், கடவுள் எங்களைப் படைத்த விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் அழகுதான் என்றும், ஆண்களை அவர்களின் தோற்றத்தை வைத்து நாங்கள் மதிப்பிடுவதில்லை.

இதற்கு சரியான பதிலடியாக, உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்’’ எனப் பதிவிட்டிருந்தார். ஆத்மிகாவுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்