தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பிரபல நடிகை….!!!
- நடிகை சமீரா ரெட்டி சிறந்த இந்திய நடிகை ஆவார்.
- தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் சமீரா.
நடிகை சமீரா ரெட்டி சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் சூர்யாக்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர். இவர், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடத்த 2014-ம் ஆண்டு தொழில் அதிபர் அக்ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டார். சமீராவுக்கு ஹான்ஸ் என்ற மகன் இருக்கிறார். தற்போது 2வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.
இவர் கர்ப்பமாய் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து பலருமகிந்தால் செய்துள்ளனர்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது, நடிப்பிலிருந்து விலகி திருமணம் செய்துகொண்டபின் கர்ப்பம் அடைந்த சமயம் எனது உடல் எடை கூடியது. எனது தோற்றத்தை கண்டு கமென்ட் செய்தனர்.
இது குறித்து அவர் பேசுகையில், “உடல் அமைப்பைக் கொண்டு கிண்டல் செய்பவர்களைப் பார்த்து கேட்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் அம்மாவின் உடல் வழியாகத் தானே வந்தீர்கள், உங்களைப் பெற்றபின் உங்களது அம்மாவின் கவர்ச்சி குறைந்துவிட்டதா என்று அவரிடமே கேளுங்கள்” என்று கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.