தனி ஒருவன் 2 : அதிகாரபூர்வ அறிவிப்பு
2015-ல் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் தனி ஒருவன். ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா, தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த அந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார்.
அதையடுத்து சிவகார்த்திக்கேயன் – நயன்தாரா நடிப்பில் வேலைக்காரன் படத்தை இயக்கிய மோகன்ராஜா, விஜய், அஜித்தை வைத்து அடுத்த படத்தை எடுக்க போவதாகச்செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தனது அடுத்த படம் தனி ஒருவன்-2 என்று மோகன் ராஜ இன்றுஅறிவித்துள்ளார். இந்த படத்திலும் ஜெயம் ரவியே நாயகனாக நடிக்கிறார்.தனி ஒருவன் வெளியாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகி , இந்த அறிவிப்பை ஜெயாம் ரவியுடன் இணைந்து வீடியோவாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மோகன் ராஜா.