தனியா வாங்களேன் ,பேசணும் அப்படினா யோசிங்க…மிளகாய்ப் பொடியை வச்சுருப்பேன் நடிகை மும்தாஜ்…!!
சினிமாவில் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், என்னுடைய பாதுகாப்புக்கு மிளகாய் பொடி இருக்கிறது என்று நடிகை மும்தாஜ் கூறியுள்ளார்.
மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறும் விவகாரம் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மும்தாஜிடம் கேட்டபோது. ‘இன்று மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் விளைவுகளும் இருக்கும் என்பதுதான் என் கருத்து.
‘தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும்’ என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். மிகப்பெரிய கூட்டுமுயற்சியால் உருவாகிற சினிமாவில் தனியே ஏன் பேசவேண்டும்? என்று சிந்திக்கவேண்டும். தனியே வரச்சொல்லி என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள். நான் அப்படிப் பார்ப்பதையே தவிர்த்திருக்கிறேன்.
சில தருணங்களில் சில விழாக்களுக்கோ, படப்பிடிப்புக்கோ நான் மட்டுமே போகக்கூடிய சூழல் வரும்போது, என்னுடைய அம்மா, மிளகாய்ப் பொடியை ஒரு பேப்பரில் மடித்து, என்னிடம் தருவார். ‘எதுக்கும் இதைப் பாதுகாப்புக்கு வைத்துக்கொள். தப்பா ஏதாவது நடந்துச்சுன்னா, உடனே மிளகாய்ப் பொடியைத் தூவிடு’ன்னு கொடுத்திருக்காங்க. அப்போதெல்லாம், பெப்பர் ஸ்ப்ரே வரவில்லை’ என்றார்.
DINASUVADU