நடிகர் விஜய், விக்ரம், சிம்பு ஆகியோரை வைத்து பொன்னியின் செல்வன் கதையை படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் என்றலே தனி ஸ்டைல் என்று படம் பார்க்க செல்பவர்கள் ஏராளாம் அப்படி அவர் இயக்கும் படம் என்றலே ஒரு தனி ரகம் தற்போது இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் சிம்பு, நடிகர் அரவிந்த் சாமி, நடிகர் அருண் விஜய் என திரை பட்டாளமே இணைந்து நடித்தனர். படம் சினிமா விமர்சகர்களிடையே நல்ல விமர்சனத்தையும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்றது. ரசிகர்கள் படத்தை சிறந்த மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். இந்நிலையில் இயக்குநர் மணி ரத்னம் அடுத்ததாக தனது கனவு படமாக வைத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த கதையை முன்னரே நடிகர் விஜய் நடிகர் மகேஷ்பாபு ஆகிய இருவரிடம் பொன்னியின் செல்வன் கதை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பட்டுள்ளதாகவும் ஆனால் படத்திற்குக்கான பட்ஜெட் எகிறியதால் அந்த முயற்சியை அப்போது மணிரத்னம் கைவிட்டதாக கூறப்படுகிறது.ஆனால் தற்போது இந்தப் படத்துக்காக நடிகர் விஜய்,நடிகர் விக்ரம்,நடிகர் சிம்பு ஆகியோரை இயக்குநர் மணி ரத்னம் அணுகியுள்ளார்.
இது தொடர்பான வெளியான தகவல் படி நடிகர் விஜயை தன் அலுவலகத்துக்கு வரவழைத்து ஃபோட்டோ ஷூட் செய்யப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இது குறித்து மணிரத்னம் தெரிவிக்கையில் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.முன்று நட்சத்திரங்களின் காம்போ எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே ஆர்வம் எகிரியுள்ளது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…