Categories: சினிமா

தந்தையர் தினத்தை கூட விட்டுவைக்காத சன்னி லியோன்-டேவிட் வெப்பர்!அந்த மாதிரி போட்டவை வெளிட்டதால் சர்ச்சை!

Published by
Venu

இன்ஸ்டாகிராமில்  பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் கணவர், டேவிட் வெப்பர் தன்னுடைய பகிர்ந்த புகைப்படத்திற்காகக் கடும் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

Image result for fathers day sunnyleone husband

 

தந்தையர் தினமான நேற்று முன்தினம்  பாலிவுட் பிரபலகங்கள் பலர் சமூக வலைதளங்களில், தங்கள் தந்தையர்களின் படங்களையும், பிள்ளைகளின் படங்களையும் பகிர்ந்தனர். இந்நிலையில் டேவிட் வெப்பரும், தன் மனைவி சன்னி லியோன் மற்றும் மகள் நிஷா ஆகியோருடன் உள்ள புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். இதை முறையற்றதாகக் கருதிய பலர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

வெப்பர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” இன்று தந்தையர் தினம்!!! கற்பனை செய்து பார்க்க முடியாத பெரும் அன்பு !!! நிஷா கவுர் மீதும்,  என் மீதும் கொண்ட அன்பிற்காக  நன்றி!!!  எது சிறந்தது என்று எப்போதும் உணர்தவள் நீ. என் இதயத்தைத் திருடிய அவள்தான் எனக்கு எல்லாமும் !!! நன்றி ” என்று சன்னி லியோனை டேக் செய்து, இப்புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

இது சமூக வலைத்தளங்களில் உள்ள பெரும்பாலானோரால் வரவேற்கப்படவில்லை. “அந்தரங்கமாக வைக்கப்பட வேண்டிய புகைப்படங்களைச் சமூக வலைத்தளத்தில் பகிர்வது சரியில்லை. இதை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள்.
இல்லையென்றால், உங்கள் மனைவியை ட்ரால் செய்வதற்கு எல்லாருக்கும் முழு உரிமை உள்ளது.” என்று ஒருவர் பின்னூட்டம் இட்டிருந்தார்.

அதே நேரத்தில் “ஆயிரம் பேர் இந்தப் புகைப்படத்தை விமர்சித்தாலும், இதில் நிரம்பி வழியும் அன்பை கண்டு வியக்கிறேன். இதில் சன்னி லியோன் – வெப்பர் தம்பதி எப்படி மக்களின் சிந்தனையோட்டத்தை மாற்றியிருக்கிறது என்பதும்
தெரிகிறது. இந்தப் புகைப்படத்தை மதிக்கும் அத்தனை பேருக்கும் என்னுடைய அன்பு” என்றும், ” அந்தச் சிறிய தேவதை மேல் அவர்கள் பொழியும் அன்பை புறந்தள்ளிவிட்டு, இந்தப் புகைப்படத்தைப் பார்த்து அவர்களை மதிப்பிடும் அத்தனை பேரையும் வெறுக்கிறேன். உங்கள் இருவருக்கும் என்னுடைய அன்பு” என்றும் சன்னி லியோன், வெப்பருக்கு ஆதரவாக அவர்களது ரசிகர்களும் களம் இறங்கியுள்ளனர்.

சன்னி லியோன் – வெப்பர் தம்பதி, கடந்த வருடம், ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து அதற்கு நிஷா கவுர் வெப்பர் எனப் பெயரிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…

12 minutes ago

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

54 minutes ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

1 hour ago

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

2 hours ago

பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… எந்தெந்த ஊருக்கு எத்தனை பெருந்து இயக்கப்படுகிறது.?

சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…

2 hours ago

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?

டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…

3 hours ago