தந்தையர் தினத்தை கூட விட்டுவைக்காத சன்னி லியோன்-டேவிட் வெப்பர்!அந்த மாதிரி போட்டவை வெளிட்டதால் சர்ச்சை!
இன்ஸ்டாகிராமில் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் கணவர், டேவிட் வெப்பர் தன்னுடைய பகிர்ந்த புகைப்படத்திற்காகக் கடும் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறார்.
தந்தையர் தினமான நேற்று முன்தினம் பாலிவுட் பிரபலகங்கள் பலர் சமூக வலைதளங்களில், தங்கள் தந்தையர்களின் படங்களையும், பிள்ளைகளின் படங்களையும் பகிர்ந்தனர். இந்நிலையில் டேவிட் வெப்பரும், தன் மனைவி சன்னி லியோன் மற்றும் மகள் நிஷா ஆகியோருடன் உள்ள புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். இதை முறையற்றதாகக் கருதிய பலர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
வெப்பர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” இன்று தந்தையர் தினம்!!! கற்பனை செய்து பார்க்க முடியாத பெரும் அன்பு !!! நிஷா கவுர் மீதும், என் மீதும் கொண்ட அன்பிற்காக நன்றி!!! எது சிறந்தது என்று எப்போதும் உணர்தவள் நீ. என் இதயத்தைத் திருடிய அவள்தான் எனக்கு எல்லாமும் !!! நன்றி ” என்று சன்னி லியோனை டேக் செய்து, இப்புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் உள்ள பெரும்பாலானோரால் வரவேற்கப்படவில்லை. “அந்தரங்கமாக வைக்கப்பட வேண்டிய புகைப்படங்களைச் சமூக வலைத்தளத்தில் பகிர்வது சரியில்லை. இதை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள்.
இல்லையென்றால், உங்கள் மனைவியை ட்ரால் செய்வதற்கு எல்லாருக்கும் முழு உரிமை உள்ளது.” என்று ஒருவர் பின்னூட்டம் இட்டிருந்தார்.
அதே நேரத்தில் “ஆயிரம் பேர் இந்தப் புகைப்படத்தை விமர்சித்தாலும், இதில் நிரம்பி வழியும் அன்பை கண்டு வியக்கிறேன். இதில் சன்னி லியோன் – வெப்பர் தம்பதி எப்படி மக்களின் சிந்தனையோட்டத்தை மாற்றியிருக்கிறது என்பதும்
தெரிகிறது. இந்தப் புகைப்படத்தை மதிக்கும் அத்தனை பேருக்கும் என்னுடைய அன்பு” என்றும், ” அந்தச் சிறிய தேவதை மேல் அவர்கள் பொழியும் அன்பை புறந்தள்ளிவிட்டு, இந்தப் புகைப்படத்தைப் பார்த்து அவர்களை மதிப்பிடும் அத்தனை பேரையும் வெறுக்கிறேன். உங்கள் இருவருக்கும் என்னுடைய அன்பு” என்றும் சன்னி லியோன், வெப்பருக்கு ஆதரவாக அவர்களது ரசிகர்களும் களம் இறங்கியுள்ளனர்.
சன்னி லியோன் – வெப்பர் தம்பதி, கடந்த வருடம், ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து அதற்கு நிஷா கவுர் வெப்பர் எனப் பெயரிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.