தடம் படத்தில் தடம் பதித்த வித்யா பிரதீப்….!!
- `தடம்’ படத்தின் வாயிலாகப் பலரின் பாராட்டையும் பெற்ற வித்யா.
- ‘தடம்’ படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி வித்யா பிரதீப் கூறியுள்ளார்.
தடம் படம் அருண்விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வித்யா பிரதீப், மலர்விழி கேரக்டேரில் நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து அவர் கூறுகையில், என் நடிப்பிற்கான முழு அங்கீகாரம் மக்களிடமிருந்து கிடைக்காதா எனப் பல நாள்கள் எதிர்பார்த்த நாட்கள் உண்டு என்று கூறியுள்ளார்.
மேலும், நாயகி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்திருந்த நான், இப்போது `தடம்’ படத்தின் வாயிலாகப் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளேன். என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, மகிழ் திருமேனி சாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!”என தடம்’ படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி வித்யா பிரதீப் கூறியுள்ளார்.